கொரோனா வைரஸ் தாக்குதலை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் மருந்து சாத்தியம் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அறிவித்துள்ளது.
யோகா நிபுணர் பாபா ராம் தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மூலிகை மருந்துகளையும், அதன் வழியிலான பொருட்களையும் தயாரித்து உலகம் முழுதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி, ஏ.என். ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆச்சாரிய பாலகிருஷ்ணா, “பதஞ்சலி நிறுவனம் உருவாக்கிய ஆயுர்வேத மருந்தை நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. மருந்து 100% சாதகமான முடிவுகளை அளித்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.
“கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிய நிலையில், நிபுணர்கள் குழுவை நாங்கள் நியமித்தோம். முதலில் கொரோன வைரஸ் போல உருவகப்படுத்துதல் செய்யப்பட்டது. பின் மருந்துக்க்கான மற்றும் கலவைகள் (compounds)அடையாளம் காணப்பட்டன. அவை வைரஸை எதிர்த்துப் போராடுகின்றன. அது உடலில் பரவுவதை நிறுத்துகின்றன. இந்த மருந்தை நாங்கள் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து ஒரு மருத்துவ ஆய்வை மேற்கொண்டோம், எங்களுக்கு 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன ”என்று ஹரித்வாரில் பால்கிருஷ்ணா கூறினார்.
“ஆயுர்வேதத்தின் மூலம் கொரோனாவை குணப்படுத்துவது சாத்தியம் என்று நாங்கள் கூறுகிறோம். எங்கள் நிறுவனம் இப்போது கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறது, மேலும் ஒரு வாரத்திற்குள் இதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட உலகம் முழுதும் கொரோன வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இந்நிலையில் பதஞ்சலியின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-வேந்தன்**�,