பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி ட்வீட்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் அதிபர் ஜேர் போல்சேனரோ விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நண்பர் அதிபர் ஜேர் போல்சேனரோ உடல்நலம் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அதை போர்ச்சுகீஸ் மொழியிலும் ரீபோஸ்ட் செய்திருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை போல்சேனரோ தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, தான் நலமாக இருப்பதாகவும் லேசான அறிகுறிகள் மட்டும் தென்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசின் தீவிரத்தன்மை மற்றும் பாதிப்பு குறித்து குறைவாக மதிப்பிட்டதாக அவர் மீது பல சர்ச்சைகள் உள்ளன. பிரேசிலில் 66 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் 1.6 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை எனக்கு லேசாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திங்கள்கிழமை மேலும் சிறிது மோசமடைந்ததால், கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் எனக்கூறி சோதனை மேற்கொள்ளப்பட்டது” என்று கூறிய அதிபர் பிறகு நுரையீரல் தொடர்பாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் அமைதியுடனும், நலமுடனும் இருப்பதாக தெரிவித்த அதிபர் தனது முக கவசத்தையும் எடுத்து காட்டினார். இனி பெரும்பாலும் வீடியோ கான்பரன்சிங் முறையை பின்பற்றி சந்திப்புகளை நிகழ்த்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

** – பவித்ரா குமரேசன் * *

�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts