உலகில் 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு மனநலப் பிரச்சனை!

public

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்தது. மேலும் கொரோனா தனிமனித வாழ்க்கை எனும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சூழ்நிலை, குழந்தைகளின் எதிர்காலம் போன்றவற்றை எண்ணி பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக அளவில் 100 கோடி பேருக்கும் மேல் மனநலப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக அளவில் மன சோர்வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலகில் 100 கோடி பேருக்கு மேல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் தங்களது வருங்காலத்தைக் குறித்து மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளனர். இப்போது உலக அளவில் 100 மரணங்களுக்கு ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 58 சதவீதம் இதற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இதனால் வரும் காலங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களின் மன சோர்வை போக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *