என்எல்சியில் மீண்டும் சோகம்: பாய்லர் வெடித்து 6 பேர் பலி!

Published On:

| By Balaji

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியிலுள்ள என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் மொத்தமாக 7 அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகிலிருந்தும் 210 மெகாவாட் என 1470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நிர்வாகம் மற்றும் விநியோக ஊழியர்கள் உட்பட சுமார் 2,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் 5ஆவது அலகு பகுதியில் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 1) வழக்கம் போல பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

விபத்தில் பலத்த தீக்காயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரை மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், திருச்சி மருத்துவமனையிலும் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாய்லர் வெடிப்பு சம்பவம் குறித்த தகவலறிந்து தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

<img src="https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/image_arc/2020/07/01/35b.jpg" width="100%"

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி 2 அனல் மின் நிலையம், 6ஆவது அலகில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கடந்த மே மாதம் அதே 6ஆவது அலகில் பாய்லர் வெடித்து நடந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

**காசி, எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share