இளைஞர்கள் ஒரு நாளாவது கிராமங்களுக்கு செல்ல வேண்டும்: சத்குரு

public

இளைஞர்கள் மாதத்தில் ஒரு நாளாவது கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆடிப் பெருக்கு நன்னாளை முன்னிட்டு சத்குரு தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், “வணக்கம், அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நம் தமிழ் கலாச்சாரத்தில் ஆடிப் பெருக்கு என்பது மிகவும் முக்கியமான நாளாகும். இது மழை, நீர் மற்றும் மண்ணுடன் தொடர்புடைய ஒரு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இப்போது, ஆறுகள் எல்லாம் முழுமையாக ஓடும் நேரம். இந்த வருடத்தில் நன்றாக மழை பெய்துள்ளது. ஆறுகள் முழுமையாக ஓடுகின்றன. ஆனால், இந்த ஆறுகள் எப்போதும் இப்படியே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தையும் விவசாயத்தையும் ஆரோக்கியத்தையும் அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல நம் மண்ணையும் ஆறுகளையும் காப்பாற்ற வேண்டும்.

இந்த நோக்கத்தில் தான் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் கொரோனா வைரஸ் என்ற சவாலை எதிர்கொண்டு வரும் சூழலிலும், நம் தன்னார்வ தொண்டர்கள் களத்தில் செயல் செய்து வருகிறார்கள். காவேரி நதி படுகைகளில் இருக்கும் நம் விவசாயிகள் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளனர்.

இந்தப் பணியில் நீங்கள் அனைவரும் உங்களால் எந்தளவுக்கு முடியுமோ, அந்தளவுக்கு ஈடுப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ் இளைஞர்களை நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஒரு நாளாவது கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். அங்கு என்ன நடக்கிறது, அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள், விவசாயம் எப்படி நடக்கிறது என்பதையெல்லாம் நீங்கள் கவனிக்க வேண்டும். இது மிக மிக தேவையானது.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஆடிப் பெருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *