டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகள் மொத்தம் 112 பேருக்கு வழங்கப்படும் என குடியரசு தலைவர் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். அதன் முதல் கட்டமாக 56 பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் கடந்த மார்ச்11ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று(மார்ச் 16) பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்காக, விஞ்ஞானி நம்பி நாராயணன், மூத்த தொழிலதிபர் மகாசேய் தரம்பால் குலாடி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரி பால் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை, நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியம்), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) நடிகர் மனோஜ் பாஜ்பாய், கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேஷாத்ரி, வில்வித்தை வீராங்கனை பாம்பேலா தேவி லாய்ஷ்ரம், ஒடிசாவில் தேநீர் கடை நடத்தி ஏழை குழந்தைகள் படிக்க உதவும் டி.பிரகாஷ்ராவ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
�,