aவில் ஸ்மித்துடன் மோதும் வில் ஸ்மித்

public

லைஃப் ஆஃப் பை இயக்குநர் ஆங் லீ இயக்கத்தில், வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டும் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆசியாவைச் சேர்ந்த் ஹாலிவுட் இயக்குநரான ஆங் லீ லைஃப் ஆஃப் பை, புரோக்பேக் மவுண்டன், குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். முதன்முறையாக முன்னணி நாயகருடன் இவர் இணையும் படம் இது. சமீப காலங்களாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வில் ஸ்மித்துக்கு இந்தப் படம் ஒரு கம்பேக் மூவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரெய்லரும் அதை நிரூபிக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது.

அரசாங்கத்துக்காக ரகசியமாகக் கொலை செய்வதில் சிறந்து விளங்குபவர் ஹென்ரி ப்ரோகன். அவர் தனது ஓய்வுக்காலத்தை நெருங்கும் சமயத்தில் இருக்கிறார். அப்போது அவரது ஒவ்வொரு அசைவையும் கணிக்கும் ஒரு மர்மமான கொலைகாரனின் இலக்காக மாறுகிறார் ப்ரோகன். அம்மனிதனை ஹென்ரி ப்ரோகன் நெருங்கும்போதுதான் தெரிகிறது அவன் தன்னை போலவே தோற்றமளிக்கும் தன்னுடைய இளமையான க்ளோனிங்க் என்று. அதன் பின் நடக்கும் அதிரடியான திருப்பங்களும், ஆக்‌ஷனுமாக டிரெய்லர் காட்சிகளே மிரட்டுகிறது.

வில் ஸ்மித், கிளைவ் ஓவன் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்கை டான்ஸ் மீடியா தயாரித்துள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி பாராமவுன்ட் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கிறது.

[ஜெமினி மேன் டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=6orc_lHvJKY)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: கமலுக்கு எதிரி ஸ்டாலினா, ரஜினியா? -பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட்](https://minnambalam.com/k/2019/07/27/70)**

**[தமிழகத்தில் இருந்து ஓர் ஆளுநர்!](https://minnambalam.com/k/2019/07/27/48)**

**[விமர்சனம்: ஏ 1 (அக்யூஸ்ட் நம்பர் 1)](https://minnambalam.com/k/2019/07/27/18)**

**[முத்துவிழாவில் மோடி, எடப்பாடி: மறுத்த ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/07/26/69)**

**[மூவரும் சொல்லிவிட்டுதான் சென்றனர்: தினகரன்](https://minnambalam.com/k/2019/07/27/64)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *