ZTEயின் துணை நிறுவனமான நூபியா ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது.
சீனாவைச் சேர்ந்த ZTE நிறுவனம் உலகில் முதன்முதலாக கடிகாரம் போல் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. OLED திரையுடன் வடிவமைப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கு நூபியா ஆல்பா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஃப்ளக்ஸிபிள் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை இரண்டாக மடித்து கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ள முடியும். இதன் இருபக்கங்களிலும் கேமரா, மைக்ரோபோன் மற்றும் பட்டன்களைக் கொண்டுள்ளன. பின்பக்கத்தில் சார்ஜிங் பின் மற்றும் இதயத் துடிப்பு சென்சார்கள் உள்ளன.
கையில் அணியும் பட்டை கருப்பு மற்றும் தங்க நிற வண்ணத்தில் கிடைக்கின்றன. இந்தப் போனின் உள்ளடக்கம் மற்றும் விலை குறித்த தகவல்களை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. மேலும் கையில் அணியக்கூடிய இந்த போனுடன், `நூபியா ரெட் மேஜிக்’ என்ற புதிய ஸ்மார்ட்போனையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Qualcomm Snapdragon 835 processor தொழில்நுட்பத்தைகொண்டுள்ள இந்த போன், 8.0 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது. 6 இன்ச் முழு தொடுதிரையுடன், 18:9 பிக்ஸல் விகிதத்தில் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் Notch அமைப்பு இருக்காது. தற்போது இந்தியாவில் வெளிவரும் முழுத் திரை ஸ்மார்ட்போன்களில் முன்பக்க கேமராவுக்காக இந்த Notch அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மாடலில் அது இருக்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நூபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.37,200 ஆகும்.�,”