ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி மெரீனாவில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் எதிரொலியாக ராணிமேரி கல்லூரி, காயிதே மில்லத், செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட சென்னையில் உள்ள 31 கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று தங்கள் மாணவிகளை எச்சரித்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி இன்று செயல்பட்டது.
இன்று மதியம் 1.00 மணியளவில் மாணவிகள் அனைவரும் ‘வீ வான்ட் ஜல்லிக்கட்டு’ என்று கூறியபடி வெளியே வந்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர்.
மேலும் அங்கிருந்து மெரீனா போராட்டக் களத்துக்கு ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் வாயிற்கதவுகளை மூடி மாணவிகளை தடுத்து நிறுத்தினர். உடனே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு வாசல் அருகே நிறுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகள் உள்ளிருந்தபடியே ஜல்லிக்கட்டுக்காக போராடியுள்ளனர்.�,