aஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!

Published On:

| By Balaji

நான்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரவக்குறிச்சியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை செலவழித்து வருகிறார் ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தல் முடிந்து ஓய்வெடுக்க நினைத்தாலும், அதை தொடர்ந்து நான்கு தொகுதியை சட்டமன்ற இடைத்தேர்தல் வந்துவிட்டதால் வேட்பாளர் தேர்வு, பரப்புரை என்று பரபரப்பாகிவிட்டார் ஸ்டாலின். இந்நிலையில்தான் இடைத்தேர்தல் பிரச்சாரம் 17 ஆம் தேதி முடிந்ததால், பண்ணைவீட்டுக்குச் சென்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் ஏழாவது இறுதிகட்ட தேர்தல் பரப்புரையும் 17 ஆம் தேதி முடிந்த நிலையில், ஓய்வெடுக்க போன இடத்திலும் ஸ்டாலின் மற்ற மாநில தலைவர்களுடன் கலந்து பேசி வருகிறார்.

அந்த வகையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்டாலினை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 9 தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை ஒருநாள் முன்னதாகவே தேர்தல் ஆணையம் முடித்து வைத்து அறிவித்தது. பாஜக தலைவர் அமித் ஷாவின் பரப்புரையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு எதிராக பல தலைவர்களும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை வன்மையாக கண்டித்திருந்தார்.

இதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி தேர்தல் நிலவரம் பற்றி விசாரித்துள்ளார்.

அப்போது தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ஸ்டாலின் கூற, பதிலுக்கு மம்தா பானர்ஜியும் தமிழ்நாட்டோடு போட்டி போட்டுக்கொண்டு மேற்கு வங்காளமும் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க விடாமல் செய்யும் என்று பதில் தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

.

**

[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share