கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் குஷ்பூ பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.அந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் , பாஸ்போர்ட் புதுப்பித்துத்தர மறுக்கப்பட்டது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர் எந்த நாட்டுக்குச் செல்கிறார்? எங்கே தங்க இருக்கிறார்? என்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு வந்தது.இந்தநிலையில் குஷ்பு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மாதம் மே 14–ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறேன். எனவே, நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தார். இறுதியில் குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்தது.
குஷ்பு தற்போது கணவர் மற்றும் மகள்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் வெனிஸ் நகரில் உள்ள கொண்டோலில் என்ற கால்வாயில் படகு சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இரண்டு பக்கமும் பழமையான கட்டிடங்கள் நடுவில் தண்ணீரில் படகு சவாரி செய்யும் இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதே லொகேஷனில்தான் அமிதாப்பச்சன், ஜீனத் அமன் நடித்த பாடல் காட்சி ஒன்று ‘The Great Gambler’ என்ற படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கும். இருவரும் படகு சவாரி செய்தவாறு பாடிய இந்த பாடல் புகழ்பெற்றது. இந்த பாடலில் வரும் ஜோடியை போலவே தானும் தன்னுடைய ஜோடியுடன் இதே இடத்தில் படகு சவாரி செய்ய வேண்டும் என்ற தனது கனவு 22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறைவேறியுள்ளது என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.மேலும் குஷ்பு தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் செல்பி புகைப்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.�,”