aவேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!

Published On:

| By Balaji

கொங்கு மண்டலத்தின் துணை முதல்வர் போல செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஏற்கனவே அதிமுகவுக்குள் ஒரு பெயர் உண்டு. அந்த அளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக இருக்கிறார் வேலுமணி. முதல்வர் எடப்பாடி நினைத்தவுடன் டெல்லி செல்வது இயலாத காரியம் என்பதால், முதல்வர் நினைத்தவுடன் தான் டெல்லி சென்று, அங்கே முதல்வருக்காக யாரைப் பார்க்க வேண்டும், பிரச்சினைகளை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதெல்லாம் வேலுமணிக்கு அத்துப்படி.

இப்படி முதல்வரின் நிழலாக டெல்லியில் விழும் வேலுமணி மீதுதான் முதல்வருக்கே சந்தேகம் வந்திருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

“அண்மையில் வேலுமணியும் தங்கமணியும் டெல்லி சென்று பாஜக தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்தனர். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா தர வேண்டாம் என்பது எடப்பாடியின் எண்ணம். அதைச் சொல்வதற்காக இருவரும் அமித் ஷாவைச் சந்தித்தபோதுதான்,** ‘பாமகவுக்கு ஒரு சீட் கொடுத்துடணும். பின்னாடி நமக்கு இது உதவும்’ என்று அமித் ஷா இரு அமைச்சர்களிடமும் கூறியுள்ளார். இது முதல்வருக்குத் தெரியப்படுத்தப்பட்டு அதிமுக சீனியர்களிடம் ஆலோசித்த பிறகே அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தாமதமாக அறிவிக்கப்பட்டது.**

தனக்காக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களுடன் பேசுகையில் என்ன நடக்கிறது என்று முதல்வரும் ஒருபக்கம் விசாரித்து வருகிறார். அந்த வகையில் **வேலுமணி டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்தபோது, ‘நீங்க இருக்கச் சொன்னா அதிமுகவுலயே இருக்கேன். இல்ல, கிளம்பி பாஜக பக்கம் வாங்கன்னு சொன்னீங்கன்னா என்னோட ஆதரவாளர்களோட பாஜகவுக்கு வரவும் தயார்’ ** என்று சொன்னதாக எடப்பாடிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதைத் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில், ‘நமக்குத்தான் நம்பிக்கையானவங்களா இருக்காங்கன்னு நினைக்கிறோம். ஆனால், யாரு, எப்ப எங்க போவாங்கன்னு கணிக்கவே முடியலை’ என்று வேலுமணி பற்றிய ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி. **ஏற்கனவே வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் சிற்சில மனஸ்தாபங்கள் இருப்பதாகக் கருதப்படும் நிலையில் இந்த டெல்லி விவகாரம் வேறு இருவருக்கும் இடையே வேறுபாட்டை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது”** என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமான அந்த அதிமுக புள்ளிகள்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share