அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான *ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ்* உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தைத் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. 2019 முதல் 2028 வரையிலான அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து 5.3 சதவிகித வளர்ச்சியுடன் பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்திலும், 5.1 சதவிகித வளர்ச்சியுடன் இந்தோனேசியா மூன்றாம் இடத்திலும் இருக்கும். சீனாவின் வளர்ச்சி விகிதம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குச் சராசரியாக 5.1 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் எனவும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. வளரும் நாடுகள் தங்களது வளர்ச்சியை நிலையாக வைத்துக்கொள்ளச் சேமிப்பு மிக மிக அவசியம் என்று இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த பொருளாதார வல்லுநரான லூயிஸ் கூஸ்ச் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
�,