புதுமுக கன்னட நடிகரை விமலும் அவரது நண்பர்களும் தாக்கியதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் விமலும், அவரது மூன்று நண்பர்களும் வசித்து வருகின்றனர். அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் கன்னட புதுமுக நடிகரான அபிஷேக்கும் தங்கி ‘அவன் அவள் அது’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அபிஷேக்கிற்கும், விமலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து விமலும் அவரது நண்பர்களும் சேர்ந்து அபிஷேக்கை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அபிஷேக்கிற்கு காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
விமலும் அவரது நண்பர்களும் சேர்ந்து மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அபிஷேக் புகாரளித்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பின் சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களின் அடிப்படையில் விமல் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரிவு 294பி-யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் விமலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளார். இவ்விரு வழக்குகள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.�,