aவிடுமுறையில் நீட் வகுப்பு வேண்டாம்!

public

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால், மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தேர்வு விடுமுறைக்குப் பிறகு நீட் பயிற்சி வகுப்பு நடத்த அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இலவசப் பயிற்சி வகுப்புகள் 413 மையங்களில், தமிழகம் முழுவதும் கடந்த 15ஆம் தேதியன்று தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களான வரும் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அட்டவணை வெளியிடப்பட்டது.

மாநிலக் கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி மையத்தின் சார்பில், துறைசார் வல்லுநர்கள் பாடம் நடத்துவர் ‘எஜூசாட்’ திட்டம் மூலம் புரொஜெக்டரில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையதளச் சேவை குறைபாடு காரணமாகப் பல பள்ளிகளில் புரொஜெக்டர் மூலமாக வகுப்புகள் கையாளப்படவில்லை. காலாண்டுத் தேர்வு இருந்ததால், மாணவர்களும் இவ்வகுப்பில் பங்கேற்க ஆர்வம்காட்டவில்லை.

முறைப்படி ‘நீட்’ வகுப்பு தொடங்கப்பட்டுள்ளதால், இனிவரும் வார இறுதி நாட்களில் நீட் பயிற்சி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது நடந்துகொண்டிருக்கும் காலாண்டுத் தேர்வானது வரும் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு விடுமுறைக்குப் பின், அக்டோபர் 3ஆம் தேதியன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் மதிப்பீட்டுப் பணிகள் இருப்பதால், நீட் வகுப்பு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டுமென்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுபற்றி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், காலாண்டுத் தேர்வுகள் பொது வினாத்தாள் பாணியில் நடப்பதாகத் தெரிவித்தனர். “இதன் முடிவுகள் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்வது, பாடத்திட்டம் தொடர்பாகப் புதிய தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளதால், விடுமுறை நாட்களுக்குப் பின் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்க வேண்டும். மாணவர்களும் விடுமுறை நாட்களில் ஓய்வெடுத்தால்தான், பள்ளி தொடங்கிய பின் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்” என்று கூறினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *