aவாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

Published On:

| By Balaji

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 23) அஞ்சலி செலுத்தினார்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அஸ்தியானது நேற்று (ஆகஸ்ட்.22 ) டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாய் அஸ்தி கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இரவு 7.30 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஸ்தி கலசத்துக்கு, பாஜக தொண்டர்கள் , காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை கமலாலயத்துக்கு வந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாஜ்பாயின் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், பாஜக அலுவலகத்தில் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணனுடன் ஸ்டாலின் சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார். அதுபோன்று, கமலாலயத்தில் உள்ள வாஜ்பாய் அஸ்திக்குத் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் அஞ்சலி செலுத்தினார்.

வாஜ்பாய் அஸ்தி இன்று முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.. மாலை 6.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

தொடர்ந்து வரும் 26ஆம் மதுரை வைகை, ஸ்ரீரங்கம் காவிரி, பவானி, தாமிரபரணி ஆகிய 4 நதிகள் மற்றும் சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் உள்ள கடல்களில் அஸ்தி கரைக்கப்படவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share