aவரி ஏய்ப்பு : சரவணா ஸ்டோர்ஸில் சோதனை!

Published On:

| By Balaji

பிரபல துணிக்கடையான சரவணா ஸ்டோர்ஸில் இன்று காலை முதல் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சரவணா ஸ்டோர்ஸ் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. சென்னையில், பாடி, தாம்பரம், வேளச்சேரி, தி.நகர் என பல இடங்களிலும் உள்ளது. கடந்த சில நாட்களாக வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் போல் வரும் அதிகாரிகள் பின்னர், சோதனையை மேற்கொள்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தி.நகர், சரவணா ஸ்டோர் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 19) சென்னை, தி.நகர் மற்றும் பாடி சரவணா ஸ்டோர் உள்ளிட்ட 5 இடங்களில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் ஜி.எஸ்.டி. புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். காலை தொடங்கிய சோதனை தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share