aமுதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு!

public

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

கடந்த 8, 9ஆம் தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 12) தமிழகத்தில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக இத்தேர்வு நடைபெறவுள்ளது.

பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் [ஆசிரியர் தேர்வு வாரிய](http://trb.tn.nic.in/) இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 319, ஆங்கிலம் – 223, கணிதம் – 279, இயற்பியல் – 210, வேதியியல் -56, தாவரவியல் – 154, விலங்கியல் – 144, வரலாறு – 104, புவியியல் – 11, பொருளாதாரம் – 211, வணிகவியல் – 99, அரசியல் அறிவியல் – 14, உடற்கல்வியியல் – 16, உயிர்வேதியியல் – 1, நுண்ணுயிரியியல் – 1,

மனையியல் – 1, இந்தியப் பண்பாடு – 1 என்று மொத்தம் 2,144 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்று தெரிவித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *