Aமுதல் நபர் பிரித்விராஜ்

Published On:

| By Balaji

கேரளாவில் கார் வாங்கினால் அதிக வரி செலுத்த வேண்டுமெனப் பலரும் கார் வாங்க மறுத்துவரும் நிலையில், மலையாள நடிகர் பிரித்விராஜ் புது மாடல் கார் ஒன்றை வாங்கியதுடன் முறையாக வரியும் செலுத்தியிருக்கிறார்.

கேரளாவில் கார் வாங்கினால் அம்மாநில மோட்டார் வாகனச் சட்டபடி காரின் மதிப்பில் 20 சதவிகிதம் வரியாகச் செலுத்த வேண்டிவரும். இதனால் நடிகர், நடிகையர் பிற மாநிலங்களில், அதாவது பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஆவணங்கள் செலுத்தி கார் வாங்கிக் கொள்கின்றனர். மேலும் போலி முகவரி கொடுத்து வரி ஏய்ப்பு செய்தல், முறையாக வரி செலுத்தாமை போன்ற பல்வேறு செயல்பாடுகளால் மலையாளத் திரைப் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். ஆனால், இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் மலையாள நட்சத்திரங்களுக்கு முன்மாதிரியான செயலைச் செய்திருக்கிறார் பிரித்விராஜ்.

நடிகர் பிரித்விராஜ், ‘லம்போர்கினி உரகங்’ என்ற புதுமாடல் கார் ஒன்றைச் சமீபத்தில் வாங்கியிருப்பதுடன், முறையாகப் பதிவு செய்து மலையாள சினிமா நட்சத்திரங்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். அவர் வாங்கிய உரகங் காரின் மதிப்பு ரூ.2.13 கோடி. இதற்காக அவர் ரூ.43.16 லட்சம் வரை வரி செலுத்தியிருக்கிறார். மலையாள சினிமாவுலகில் உரகங் மாடல் காரை வாங்கிய முதல் நட்சத்திரம் பிரித்விராஜ் என்கிற பெருமைக்குரியவராகியுள்ளார்.

மேலும், KL 07 CN 1 என்கிற ஃபேன்ஸி நம்பரைப் பெறுவதற்காக எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ.7 லட்சம் செலுத்தி இந்த எண்ணைப் பெற்றிருக்கிறார் பிரித்வி. இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனம் லம்போர்கினி இந்த உரகங் மாதிரி காரை உருவாக்கியிருக்கிறது. இந்த கார் 100 கி.மீ வேகத்தை எட்ட 3.4 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. அதிகபட்சமாக 320 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment