�
65 வயதுள்ள துப்பாக்கி சுடும் வீரங்கனையாக தப்ஸி நடித்த சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் தப்ஸி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். உத்தர பிரதேசத்திலுள்ள ஜொரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கிசுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமிது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. குடும்பத்திற்காக தங்கள் திறமையை இளமையில் புதைத்த சகோதரிகள் முதுமையில் மீட்டெடுத்த கதையாக வந்திருக்கிறது இதன் அட்டகாசமான டிரெய்லர். மாநில அளவிலும் தேசிய அளவிலும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற 65 வயதுக்கு மேல் ஆன சகோதரிகளின் உண்மைக்கதையிது. பிரகாஷி தோமராக தப்ஸி நடித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.அனுராக் காஷ்யப், சிபாசிஷ் சர்கார், நிதி பர்மர், உமானியா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
[சாந்த் கி ஆங்க்](https://www.youtube.com/watch?v=veJZPsd7iN0)
�,”