aபால் பொருட்களுக்குப் பெருகும் தேவை!

Published On:

| By Balaji

இந்தியாவில் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த பால் வளச் சந்தையில் அவற்றின் பங்கு உயர்ந்துள்ளது.

2016-17ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 165.4 மில்லியன் டன் அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 176.35 மில்லியன் டன்னாக உயர்ந்தது. மேலும், 2021-22ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 254.5 மில்லியன் டன்னாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும். *ரெபோபேங்க்* ஆய்வின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த பால் வளச் சந்தையில், பால் (திரவம்) 64 சதவிகிதமும், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் 25 சதவிகிதமும், நெய் 7 சதவிகிதமும், பால் பவுடர் 4 சதவிகிதமும் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம், நறுமணமூட்டப்பட்ட பால், குழந்தைகளுக்கான பால் உணவுகள் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருவதால் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான பிரிவில் 20 சதவிகிதம் வரையில் வளர்ச்சி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து *லோட்டஸ் டெய்ரி புராடெக்ட்ஸ் லிமிடெட்* நிறுவனத்தின் இயக்குநரான அனுஜ் மோடி, *தி ஏசியன் ஏஜ்* ஊடகத்திடம் பேசுகையில்,”இந்தியாவின் பால் வளத் துறையில் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான பங்களிப்பு 2020ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாக உயரும். இத்துறையின் வளர்ச்சிக்கேற்ப பால் பொருட்களின் ஊட்டச்சத்து அம்சங்கள் இருப்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share