aபடேல் சிலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

Published On:

| By Balaji

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள சர்தார் சரோவர் அணை அருகே உள்ள சாது பேட் என்ற தீவில் நிறுவப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிலை என கூறப்படும் இதன் உயரம் 182 மீட்டர் ஆகும். ரூ.2,989 கோடி மதிப்பில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷன் விருது பெற்ற ராம் வி சுதர் இச்சிலையை வடிவமைத்துள்ளார்.

வல்லபபாய் படேலின் 143ஆவது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 31), இச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிலை திறந்துவைக்கப்பட்டபோது, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை வெளிப்படுத்தியப்படி பறந்தன.

சிலையை திறந்துவைத்து பேசிய மோடி, “இந்தியாவின் வரலாற்று முக்கியமான தினம் இன்று. ஒன்றுபட்ட இந்தியாவில் நாம் அனைவரும் தற்போது வாழ்வதற்கு காரணம் சர்தார் வல்லபபாய் படேல்தான். இந்த சிலைக்கான முதல் இரும்பை நான்தான் வழங்கினேன். குஜராத் முதல்வராக இருந்தபோதே இந்த திட்டம் என் எண்ணத்தில் இருந்தது.

இந்தியாவை ஒருங்கிணைக்க கௌடிலியரின் அறிவையும் சிவாஜியின் வீரத்தையும் படேல் பயன்படுத்தினார். இந்திய ஒருமைப்பாடு, இந்திய உறுதிப்பாடு ஆகியவற்றின் சின்னம் இந்த சிலை. விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் பங்களிப்பு இந்த சிலை உருவாக்க உதவியது என்பதை நாம் புறந்தள்ள முடியாது. சிலை அமைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா மேம்படும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர அது உதவும்” என்று பேசினார்.

இதேபோல் நாடு முழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஓட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share