மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது.
கடந்த மே 12 ஆம் தேதி அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். இவரது பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர கிளம்பின. பிரதமர் மோடி ஒருவர் இந்துவாக இருந்தால் அவர் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று கமலின் கருத்துக்கு பதில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கமல் மீது கொடுத்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 76 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரவக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வி.விக்கிரமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் கமல். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு கடந்த 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பிலும், [அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/92). இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன் ஜாமீன் கோரிய மனுவுக்கு மே 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மே 20) கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”