aதொழில் துறை உற்பத்தியில் பின்னடைவு!

public

ஜனவரி மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 1.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவுசெய்துள்ளது.

தொழில் துறை உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 7.5 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்த தொழில் துறை உற்பத்திக் குறியீடு, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் வெறும் 1.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவுசெய்துள்ளது. எனினும் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் தொழில் துறை உற்பத்தி 4.4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இதன் வளர்ச்சி 4.1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.

ஜனவரி மாதம் மந்தமான உற்பத்தி இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 2.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நான்கு மாதங்களில் இருந்த அளவை விட அதிகமாகும். பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உற்பத்தி சரிவு, பணவீக்கம் உயர்வு போன்றவற்றால் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏப்ரல் மாதம் நடைபெறும் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், மார்ச் மாத இறுதியில் பணவீக்க விகிதம் 3 சதவிகிதத்தை எட்டும் என்று *கேர் ரேட்டிங்ஸ்* நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0