aதொழில் துறையில் சாதிக்கும் பெண்கள்!

Published On:

| By Balaji

பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தினால்தான் அவர்களால் தொழில் துறையில் சாதிக்க முடியும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் *பெண் கண்டுபிடிப்பாளர்கள்* தொடக்க விழாவில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு கலந்துகொண்டு பேசுகையில், “வளர்ந்து வரும் நாடுகளில் தொழில் துறைகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பெண்கள் நினைப்பதைச் சாதிக்க அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெண் தொழில் முனைவோர்கள் வர்த்தக வாய்ப்புகளைப் பெறவும், தொழில் துறையில் சாதிக்கவும் திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆதரவுகள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெண்களின் தொழில் மேம்பாட்டுக்காகத் திறன் பயிற்சிகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார். மேலும், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மின்னணு வேளாண் சந்தையில் இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், இத்திட்டம் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் சுரேஷ் பிரபு கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share