aதொப்பை உள்ள காவலர்களுக்கு நோட்டீஸ்!

public

உடல் எடை அதிகமாகவும் தொப்பையுடனும் உள்ள 186 காவலர்களுக்கு குஜராத் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அகமதாபாத் நகரின் துணைக் காவல் ஆணையர் அசோக் யாதவ், சமீபத்தில் அந்நகரின் பல காவல் நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது, 13 துணை ஆய்வாளர்கள் உட்பட தலைமைக் காவல் பதவிகளில் உள்ள 186 பேர் உடல் எடை அதிகமாகவும், தொப்பையுடன் இருப்பதையும் பார்த்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த அசோக், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். உடல் எடை கூடியதற்கான விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும், உடல் எடையைக் குறைக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அசோக் கூறுகையில், 100 கிலோ உடல் எடைக்கும் அதிகமாக உள்ள காவலர்களுக்கு மட்டுமே குஜராத் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிவித்தார். “40 சதவிகித காவலர்கள், 10 கிலோ வரை எடை குறைத்துள்ளனர். மீதமுள்ள 40 சதவிகித பேர் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைக்கும் காவலர்களுக்கு ரூ.100 பரிசு வழங்கப்படும்.

அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ராமோல் காவல் நிலையத்தில் 32 காவலர்கள் உடல் எடை அதிகரித்துக் காணப்பட்டனர். அவர்கள், தற்போது எடையைக் குறைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

உடல் எடை அதிகமுள்ள காவலர்களின் பட்டியலை, ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கோஹ்ரா பகுதியில் 10 காவலர்களும், இஸான்பூர் பகுதியில் 10 காவலர்களும், வத்வா ஜிஐடிசி பகுதியில் 12 காவலர்களும், டயராபூரில் 15 காவலர்களும், கோமதிபூரில் 17 காவலர்களும் உடல் எடை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *