தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.
தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகச் சேர்வதற்கு, டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களும் இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 15 முதல் ஏப்ரல் 12 வரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 1,552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வானது, இன்றும் (ஜூன் 8) நாளையும் தமிழகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல் தாள் தேர்வு நடைபெற்றது. நாளை காலை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறவுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 88 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.�,