விஷ்ணு மற்றும் அமலா பால் இணைந்து பணிபுரியவுள்ள திரைப்படம் ‘சிண்ட்ரெல்லா’. சைக்கலாஜிகல் திரில்லர் படமாக உருவாகவுள்ள இதை ராம்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் துணை இயக்குநர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் விஷ்ணு.
ஒரு மர்மம் நிறைந்த சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே இதன் மையக் கதை. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி அருகே இரவு வேளைகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை அஸ்ஸெஸ் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1