aதிமுக-வில் ஐக்கியமான மக்கள் தேமுதிக

public

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் விருப்பத்துக்கு மாறாக மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகிய மூன்று எம்எல்ஏ-க்கள், பத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி, ‘மக்கள் தேமுதிக’ என தொடங்கினர். பின்னர் தேர்தலில் திமுக-வுடன் இணைந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வி.சி. சந்திரகுமார், மேட்டூரில் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிபூண்டியில் சி.எச்.சேகர் ஆகியோர் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் அசோக் ஹோட்டலில் இன்று மக்கள் தேமுதிக-வின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் இருந்து தேமுதிக-வில் இருந்து விலகி எங்களுடன் பலர் கைகோர்த்துள்ளனர். அவர்களுடன் இன்று ஆலோசனை நடைபெறுகிறது’ என்றார். இறுதியாக ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதில் முக்கிய தீர்மானமாக, ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கருணாநிதி மற்றும் ஸ்டாலினால்தான் கொடுக்க முடியும் என்று விஜயகாந்திடம் வலியுறுத்தினோம். ஆனால் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற அவரின் சர்வாதிகாரி பாணியால் தேமுதிக-வில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற அமைப்பின் மூலம் திமுக-வுடன் கூட்டணி சேர்ந்தோம். தற்போது உலகமே வியந்து பேசுமளவு திமுக-வை வலிமையான எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, நாம் மக்கள் தேமுதிக என்று தனி அமைப்பாக செயல்படுவதைவிட திமுக-வில் இணைந்து பணியாற்றுவதுதான் சரியானதாகும். எனவே, திமுக-வில் மக்கள் தேமுதிக-வை இணைக்கிறோம் என ஏகமனதாக தீர்மானிக்கிறோம்’ என்று தீர்மானமிட்டனர்.

இதுகுறித்து சந்திரகுமார் கூறும்போது, ‘விஜயகாந்த் ஒரு நாய் வாங்கி அதற்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தார். அதனால்தான் அவரை நாங்கள் ‘கேப்டன்’ என்று அழைக்காமல் ‘விஜயகாந்த்’ என்று அழைக்க தொடங்கினோம். அங்கே தேமுதிக-வில் நிர்வாகிகள் கூட்டம் நடத்துகிறார். பத்து நிமிடம் வந்துவிட்டு கிளம்பிவிடுகிறார் விஜயகாந்த். அங்குள்ள நிர்வாகிகள் ‘எப்படியாவது எங்களையும் கூட்டிக்கொள்ளுங்கள்’ என்று புலம்பிக்கொண்டு உள்ளனர். அடுத்த சட்டமன்ற தேர்தலின்போது தேமுதிக என்று ஒரு கட்சியே இருக்காது. தற்போதைய சூழலில் மக்களின் உணர்வுகளை மதிக்கிற ஒரே கட்சி திமுக மட்டுமே. எனவேதான், எங்கள் அமைப்பை திமுக-விடம் இணைத்துக்கொண்டோம். விரைவில் பிரமாண்டமான இணைப்பு விழா நடத்த உள்ளோம்’ என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0