அதர்வா நடிக்கும் 100 திரைப்படம் இன்று (மே 9) ரிலீஸாக இருந்த நிலையில் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 100. அதர்வா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.
யோகி பாபு, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மே 3ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு பின்னர் மே 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதனால் பத்திரிகையாளர்களுக்கு இப்படம் சிறப்பு காட்சியாக நேற்று (மே 8) திரையிட்டு காட்டப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக படம் இன்று வெளியாகவில்லை.
நேற்று இரவு இயக்குநர் சாம் ஆண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில், 100 திரைப்படம் குறித்து அற்புதமான விமர்சனங்களைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் இந்தப் படத்திற்காக உடலையும் ஆன்மாவையும் ஒருமித்து செலுத்தி பணியாற்றியிருக்கிறோம். ஆனால், குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன். மன்னிக்கவும். இன்று ‘100’ திரைப்படம் வெளியாகாது. எனது வேலை முடிந்துவிட்டது. எனது அடுத்த படமான கூர்காவுக்குச் செல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தற்போது யோகி பாபுவைக் கதாநாயகனாகக் கொண்டு கூர்கா படத்தை இயக்கிவருகிறார்.�,”