�
லீ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.விக்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் லீவருண் நடிக்கும் ‘அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
குறும்படங்கள் மூலம் கூட்டணி அமைத்திருந்த இப்படக்குழு தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளனர். இயக்குநர் லட்சுமி காந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.விக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் பற்றி விக்கி கூறும் போது, “பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை, வாழ்வியல் எதார்த்தத்துடனும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய மாறுபட்ட படைப்பாக உருவாக இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்” என்றார்.
மேலும், “இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்ததும், இருட்டறையில் முரட்டுக் குத்து படம் போல் இருக்குமா என்று ஒப்பிடத் தேவையில்லை. கண்டிப்பா குடும்ப ஆடியன்ஸ்க்காக எடுக்கப்படும் படம். ஒரு பையன் வாழ்வில் அம்பாக பல விஷயங்கள் விடுகிறான். அது மிஸ் ஆகிக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அவன் விட்ட அம்பு குத்தியதா, இல்லையா என்பதே படத்தின் கதை” என்கிறார் இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் நாயகன் லீவருண். இப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகை பிரியா.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரத்னகுமார், இசை ஜெய்கிரிஷ், படத்தொகுப்பு ரமேஷ்பாபு. லீ வருண் தயாரிப்பில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.�,