aசென்னை: ஒரே நாளில் ஏழு பெண்கள் மாயம்!

public

சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல்போன சம்பவம் காவல் துறைக்குச் சவாலாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் ஏழு பெண்கள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை பகுதி ஏழுமலை நகரில் வசித்துவரும் கிருஷ்ணமூர்த்தியின் (62) பேத்தி விநோதினி, கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். ஏப்ரல் 23 அன்று கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன கிருஷ்ணமூர்த்தி, பல இடங்களிலும் தேடிவிட்டு சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவலர்களும் வழக்கு பதிவு செய்து விநோதினியைத் தேடி வருகின்றனர்.

இதுபோன்று சிட்லபாக்கத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி நீலாதேவி (25) மாயமாகியுள்ளார். கடைக்குச் சென்று வருவதாகக் கூறி சென்ற நீலாதேவி வீடு திரும்பவில்லை என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்காடு எல்லைக்குட்பட்ட ஜமீன் கொரட்டூர் பகுதிக்குத் தனது சித்தி வீட்டுக்குச் சென்றிருந்த சிவரஞ்சனி (16) காணாமல் போனதாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி (20) கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த வர்ஷா (20), சேலையூரை அடுத்த ஸ்ரீராம் நகரில் வசித்துவரும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சண்முகத்தின் பேத்தி என ஒரே நாளில் அடுத்தடுத்து இளம் பெண்கள் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்த வார தொடக்கம் முதல் மாயமாகியுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *