�
தினப் பெட்டகம் – 10 (23.08.2018)
வியாழன் (Jupiter) கிரகத்தைக் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்:
1. சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள் வியாழன்தான். பூமியைவிட 318 மடங்கு பெரிது வியாழன்.
2. இருப்பதிலேயே மிகவும் வேகமாகச் சுழலும் கிரகம் வியாழன்.
3. வியாழனைச் சுற்றி நமக்குத் தெரியும் அழகிய மேகமும் சுழல்களும் 50 கி.மீ. தடிமனானவை. அவை அனைத்துமே அம்மோனியாவால் உருவானவை. அதற்குக் கீழே ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே முழுவதும் நிறைந்திருக்கும்.
4. வியாழனின் காந்தப் புலம் பூமியைவிட 14 மடங்கு சக்தி வாய்ந்தது.
5. வியாழனுக்கு மொத்தம் 67 நிலாக்கள்.
6. சூரியன், நிலா, வீனஸ் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, வானத்தில் பிரகாசமான பொருள் வியாழன்.
7. அனைத்துக் கோள்களைவிடவும், மிகவும் குறுகிய நாளைக் கொண்டது வியாழன். வியாழனில் ஒரு நாள் என்பது 9 மணி நேரமும் 55 நிமிடங்களும்.
8. வியாழன் சூரியனை 11.8 ஆண்டுகளில் முழுமையாகச் சுற்றி வருகிறது.
9. ஏழு முறை விண்கலங்கள் வியாழனுக்குச் சென்றுள்ளன.
10. வியாழனில் தெரியும் அந்த சிவப்பு நிறப் புள்ளி ஒரு பெரும் புயல். கடந்த 350 ஆண்டுகளாக அந்தப் புயல் நிலவிவருகிறது. அது எவ்வளவு பெரியது தெரியுமா? மூன்று பூமியை அதனுள் அடக்கிவிடலாம்.
**- ஆஸிஃபா**
�,”