சென்னை 600028 படத்தில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜெய் குறிப்பிட்ட பாணியிலான திரைப்படங்களிலேயே ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். தற்போது முதன்முறையாக சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் திரைப்படம் பிரேக்கிங் நியூஸ். விஷுவல் எபெக்ட்ஸ் துறையில் பட்டம் பெற்றுள்ள ஆண்ட்ரூ தமிழில் தனது முதல் படத்தையே சூப்பர் ஹீரோ கதையில் இயக்குகிறார். திரைக்கதையை முடித்துவிட்டு ஜெய்யிடம் கதையை விவரித்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்து படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
சாதாரண மனிதன் நாட்டை எவ்வாறு மாற்றியமைக்கிறான் என்பதை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 90 நிமிடங்களுக்கும் மேல் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. சில நிறுவனங்களில் இந்த காட்சிகளை உருவாக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தக் காட்சிகளை உருவாக்க ஆறு மாத காலம் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அந்தோணி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். மும்பையைச் சேர்ந்த ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்கிறார். பிப்ரவரி 21ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.�,