விஜய் சேதுபதி, அஞ்சலி இணைந்து நடித்துள்ள சிந்துபாத் திரைப்படத்தின் ‘நெஞ்ச உனக்காக’ என்ற மெலடி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஏற்கெனவே வெளியான ராக்ஸ்டார் ராபர் பாடலில் தென்காசிப் பகுதியில் திருட்டு வேலைகளில் ஈடுபடும் விஜய் சேதுபதியும், சூர்யாவும் இடம்பெற்றிருந்தனர். தற்போது வெளியாகியுள்ள நெஞ்ச உனக்காக பாடலில் அஞ்சலியை காதலிக்கும் விஜய் சேதுபதி அவரை ஈர்ப்பதற்காக அவர் வீட்டையே சுற்றிசுற்றி வருவதாக காட்சிகள் இடம்பெறுகின்றன. தென்காசியைச் சுற்றிய பகுதிகளில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
**“நெஞ்ச உனக்காக நான் பதுக்கி வச்சேன்**
**எங்கும் கொடுக்காம**
**செஞ்சும் செதுக்காம விட்ட குறை நிலவா**
**நீ கிடைக்காம**
**வந்தா வேட்டியில கட்டி அடை காப்பேன்**
**நெத்தி கோட்டுல கொஞ்சம் இடம் கேப்பேன்”**
என்ற இயல்பான வரிகளால் ஈர்க்கிறார் விவேக். ஹரிசரன் குரல் கொடுத்துள்ளார்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஏ.ஆர்.மோகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் சார்பாக எஸ்.என்.ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். இதன் தமிழக விநியோக உரிமையை ‘கிளாப் போர்டு புரொடக்சன்ஸ்’ சத்யமூர்த்தி பெற்றுள்ளார். ஜூன் 21ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[நெஞ்ச உனக்காக](https://www.youtube.com/watch?time_continue=11&v=bzeegaj9lS0)
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)
**
**
[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)
**
�,”