?
நடிகர் நடிகைகள் பற்றி அறிந்துகொள்ள நாளிதழ்கள், வார இதழ்களின் செய்திகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த காலம் போய் தனக்குப் பிடித்த பிரபலங்களுடன் ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் நேரடியாக உரையாடும் சூழல் தற்போது நிலவுகிறது. இதையும் கடந்து சில நடிகைகள் தங்களுக்கென்று பிரத்யேக செயலிகள் வெளியிடுகின்றனர். வெகு சில நடிகைகளே தங்களுக்கென இணையதளங்களை உருவாக்கி தனது தகவல்களை வெளியிடுகின்றனர். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் புதிய இணையதளம் தொடங்கி ரசிகர்களுடன் தொடர்புகொள்ள எளிய வழியை அமைத்துள்ளார்.
நேற்று தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள படங்கள் பற்றிய அறிவிப்புகள் உள்ளன. அந்தவகையில் மகாநதி, சண்டகோழி 2, சாமி ஸ்கொயர், தளபதி 62 ஆகிய படங்களில் அவர் நடித்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாநதி திரைப்படத்தின் டீசர் வீடியோவும் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கீர்த்தியின் புகைப்படங்கள், பிடித்த பாடல்கள், வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கீர்த்தியின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களுக்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ன.
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் மகாநதி திரைப்படம் மே 9ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தளத்தில் அதற்கான கவுன்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[கீர்த்தியின் இணையதளம்](https://www.keerthysuresh4us.com/)�,