10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை நேற்று (செப். 1) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்குத்தான் இதுவரை பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், நீட் நுழைவுத் தேர்வு அறிவித்ததிலிருந்து, கடந்த கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாணவர்களை பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யும் விதமாக இந்த 2018-2019 கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையைத் தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
ப்ளஸ் 2 வகுப்புகான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ப்ளஸ் 1 வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது,
மூன்று வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு ஒரே தேதியில் தொடங்கி ஒரே தேதியில் முடிவடைகிறது.
�,”