aகாட்டுமன்னார் கோவிலில் என்ஐஏ சோதனை!

Published On:

| By Balaji

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையிலுள்ள ரஷீத் என்பவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள லால்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இன்று (மே 20) காலையில் இவரது வீட்டில் சோதனை நடத்தினர் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள். ரஷீத்துக்கு ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகத் தகவல் வெளியானதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் கூட்டத்தில் ரஷீத் 2 முறை கலந்துகொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நீதிமன்ற உத்தரவின் பேரில் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக இச்சோதனை தொடர்ந்தது.

ரஷீத் வீட்டில் இருந்து ஒரு லேப்டாப், 4 பென் டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share