இந்தியாவின் மொபைல் போன் ஆபரேட்டர்களுக்கான சந்தையில் ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மே மாதத்துக்கான தொலைத் தொடர்பு சந்தாதார் குறித்த விவரங்களை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதத்தில் இந்தியாவில் உள்ள மொபைல்போன் சந்தாதார்களின் எண்ணிக்கை 1,183.15 மில்லியனாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் இதன் எண்ணிக்கை 1,183.7 மில்லியனாக இருந்தது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு இணைப்பு 90.05 சதவிகிதத்திலிருந்து 89.92 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
நெட்வொர்க் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சமீபத்தில் இணைந்த வோடஃபோன் – ஐடியா நெட்வொர்க் மொத்தம் 38.75 கோடி சந்தாதார்களைக் கொண்டுள்ளது. அதோடு, 33.36 சதவிகித சந்தைப் பங்குடன் இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமாகத் திகழ்கிறது. ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த ஏர்டெல் நெட்வொர்க்கின் சந்தைப் பங்கு 27.58 சதவிகிதமாகக் குறைந்துள்ளதால் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்த சந்தாதார்களின் எண்ணிக்கை 32.03 கோடியாக உள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் மே மாதத்தில் மட்டும் புதிதாக 81.80 லட்சம் வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் இணைத்துள்ளது. இதன் மூலம் ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதார் எண்ணிக்கை 32.29 கோடியாக உயர்ந்துள்ளது. அதோடு 27.80 சதவிகித சந்தைப் பங்குடன் ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் மே மாதத்தில் 2,125 சந்தாதார்களைப் புதிதாக இணைத்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”