�
ஆறு மாதங்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியுடன் 6 ஜிபி அளவிலான டேட்டாவை இலவசமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமாகும். ஆனாலும் ரிலையன்ஸ் ஜியோ இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறத் தொடங்கியதால் ஏர்டெல் சமீபமாக கடுமையான வருவாய் இழப்பில் மூழ்கியுள்ளது. எனவே, கவர்ச்சிகரமான சில திட்டங்களை ஏர்டெல் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 180 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புச் சலுகை கொண்ட புதிய திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் தனது பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
ரூ.995 கட்டணத்திலான இத்திட்டத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 180 நாட்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன், மாதம் 1 ஜிபி அளவிலான 3ஜி/ 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என, 180 நட்களுக்கு 18,000 எஸ்எம்எஸ்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் இச்சலுகையானது ஜியோவின் ரூ.999 திட்டத்துக்குப் போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்செல் நிறுவனம் முடங்கியுள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெலுக்கு மாறி வருவதால் இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது என்று கருதப்படுகிறது.�,