aஎன்ன சிவகார்த்திகேயன் அவ்வளவு தானா?

Published On:

| By Balaji

டீசர் மட்டும் தான் என்பதால், ராஜேஷ் மீதும் சிவகார்த்திகேயன் மீதும் இருக்கும் நம்பிக்கை கொஞ்சம் தளராமல் இருக்கிறது. மற்றபடி, மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் டீசர் அவ்வளவு ஆர்வம் தருவதாக இல்லை. என்ன புரியவில்லையா? எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்தி-நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் ரிலீஸாகியிருக்கிறது.

ரஜினி நடித்த ‘மன்னன்’ திரைப்படத்தின் சாயலில் இந்தத் திரைப்படம் உருவாவதை [மின்னம்பலத்தில் முன்பே பதிவு செய்திருந்தோம்.](https://minnambalam.com/k/2018/11/04/94) அது எவ்வளவு உண்மை என்பது டீசர் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதைத்தாண்டி தோல்விப்படங்களுக்குப் பிறகு ராஜேஷ் இயக்கியிருக்கும் படம் என்பதால் இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. முழுக்க முழுக்க சரவெடி காமெடிகளுடன் இருந்திருக்கவேண்டிய இந்த டீசர், இரு கேரக்டர்களின் அறிமுகமாக மட்டுமே முடிந்திருந்தால்கூட படத்துல நிறைய இருக்கும் என மனதைத் தேற்றிக்கொள்ளலாம். ஆனால், படத்தின் டிரேட்மார்க் காமெடிகள் சிலவற்றை வைத்திருக்கிறார்கள். அதுதான் அதிகம் பீதியடையச் செய்கிறது.

யோகி பாபுவின் டையலாக் டெலிவரியில் இருக்கும் மாடுலேஷன் கூட சிவகார்த்திகேயனிடம் இல்லாதது கொஞ்சம் அலுப்பைத் தருவதுடன், டீசரில் இருக்கும் நடன அசைவுகள் சிலவற்றையும் பார்க்கும்போது உதயநிதியின் நியாபகம் வேறு வந்துபோகிறது. அடுத்தடுத்து வெளியாகும் டிரெய்லர் மற்றும் புரோமோ வீடியோக்கள் மட்டுமே, ராஜேஷ் மீதான நம்பிக்கையை மீண்டும் அதிகரிக்கச் செய்து ரசிகர்களைத் தியேட்டருக்கு அழைத்துவரும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share