உத்தரப் பிரதேச மாநிலம் திமன்புராவில் நேற்று இரவு ரயில் தடம்புரண்டது. இதனைப் படம்பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர் அமித் சர்மாவை ரயில்வே போலீசார் தாக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே உத்தரப் பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீபத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த காரணத்திற்காகப் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நேற்று (ஜூன் 11) இரவு உத்தரப் பிரதேசத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதைப் படம்பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர் அமித் சர்மாவை, படம்பிடிக்கவிடாமல் தடுத்த ரயில்வே போலீசார், ஒருகட்டத்தில் அவரைத் தாக்கினர். அதன்பின், அவரை லாக்அப்பில் அடைத்தனர். பத்திரிகையாளர் அமித் சர்மாவை ரயில்வே துறை அதிகாரிகள் தாக்கியது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த மற்ற பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். அமித் சர்மாவை விடுவிக்கக் கோரி பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, அவரை இன்று காலையில் ரயில்வே போலீசார் விடுவித்தனர்.
“அவர்கள் சாதாரண உடையில் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் என் புகைப்படக் கருவியைத் தட்டிவிட்டதில், அது கீழே விழுந்தது. அதை எடுக்க நான் கீழே குனிந்தபோது, அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டு அடித்தார்கள். என் வாயில் சிறுநீர் கழித்தார்கள்” என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் அமித் சர்மா.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ராகேஷ் குமார், சஞ்சய் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”