ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், “ஆளுநர் பதவி தேவையில்லாதது” என்று தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எழுவரின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. அதன் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் உடனே முடிவெடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 20) எழுவர் விடுதலை தொடர்பான விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தமிழக அமைச்சரவையின் தீர்மானம் எந்த நிலையில் உள்ளது. ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று. அதில் இன்னமும் திமுக உறுதியாக இருந்துவருகிறது” என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்காக 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். அந்தத் துணிச்சல் யாருக்கு வரும்” என்று பதிலளித்தார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றுவருகிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”