a‘அய்யா’ அப்படி என்ன செய்துவிட்டார்?

Published On:

| By Balaji

எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள். ஆனால், அனைத்தும் புதிராக இருக்கிறது ‘சீதக்காதி’ டிரெய்லரில். விஜய் சேதுபதி வயதாகிப்போன கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் மட்டுமே அதிகாரபூர்வமாக முன்பு தெரிந்திருந்த நிலையில், பின்வரும் தகவல்களைச் சொல்கிறது டிரெய்லர்.

**அய்யா என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி ஒரு நடிகர்.**

**அய்யா, ஒரே சமயத்தில் பல படங்களில் கமிட் ஆகக்கூடிய அளவுக்கும், அவர் இல்லாமல் ஷூட்டிங் நிற்கும் அளவுக்கும் முக்கியமானவராக இருக்கிறார்.**

**ஆனால், அய்யா படப்பிடிப்புக்கு வரவில்லை.**

**அய்யாவுக்கு அழகான சிறிய குடும்பம் இருக்கிறது.**

**அய்யா அந்தக் குடும்பத்துடன் சிறிய வீட்டில் இருக்கிறார்.**

**அய்யாவை எப்படியும் நடிக்கவைக்க வேண்டும் என திரைத்துறையே துடிக்கிறது.**

**அய்யாவைப் பணிய வைக்கத் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் வரை செல்கின்றனர்.

**அய்யா நடிக்காததால் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.**

**அய்யா என்ன செய்யப்போகிறார் என யாருக்கும் தெரியவில்லை.**

**ஆனால், அய்யா நாடக மேடைக்குச் சென்று தன் கஷ்டங்களைச் சொல்லி அழுகிறார்.**

**நானே சரித்திரமாக மாறிவிட்டேன் எனப் புலம்புகிறார்.**

இப்படி அய்யா… அய்யா.. என அனைவரும் கதறும் அளவுக்கு ஒரு நடிகன் இருக்க முடியுமா என்று திரை ரசிகர்களையே வியக்கவைக்கும் அளவுக்கு விஜய் சேதுபதி நடித்துள்ள கேரக்டரின் அடிப்படை இந்த டிரெய்லரில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அய்யாவுக்கு என்ன பிரச்சினை என்பதை டிரெய்லரில் சொல்லவில்லை.

இப்படியொரு அதிர்வலையை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு நடிகன் இருக்க முடியுமா? அப்படி அந்த நடிகன் என்ன சாதித்துவிட்டான் என்பதைத்தான் படத்தில் பார்க்கப்போகிறோம் போல.

[சீதக்காதி – டிரெய்லர்](https://youtu.be/GDyg4qxeX68)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share