தேர்தல் தோல்விக்கு பிறகு முதன் முதலில் அமேதி சென்றுள்ளார் ராகுல் காந்தி. ட்விட்டரில் தன்னை ஒரு கோடி பேர் பின் தொடர்வதாகவும், அந்த மகிழ்ச்சியை அமேதியில் கொண்டாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் இம்முறை ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி அமேதியில் வெற்றி பெற்றார். இதற்கிடையே காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராகுல் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதன்முறையாக இன்று (ஜூலை 10) ராகுல் காந்தி அமேதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கிட்டத்தட்ட 2 மாதங்கள் நெருங்கும் நிலையில் இன்று அமேதி சென்றுள்ளார். கவுரிகஞ்ச் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர்களிடம் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கிடையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டரில் தன்னை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியை அமேதியில் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடனான சந்திப்பின் போது கொண்டாடவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**
**[நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!](https://minnambalam.com/k/2019/07/10/22)**
**[டிஜிட்டல் திண்ணை: மாமா… மாப்ள… திமுக-அதிமுக கலகல!](https://minnambalam.com/k/2019/07/09/84)**
**[புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா](https://minnambalam.com/k/2019/07/09/79)**
**[வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!](https://minnambalam.com/k/2019/07/10/26)**
�,”