_ஹெச்-1பி விசா: அண்ணா பல்கலை முதலிடம்!

public

ஹெச்-1பி விசா பெறும் பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.

வெளிநாட்டுக்குள் நுழையவும் பயணிக்கவும் கொடுக்கப்படும் அனுமதி, விசா என்று கூறப்படுகிறது. வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு, கலாசாரம் எனப் பல்வேறு வகையான விசாக்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல், ஹெச்-1பி விசா என்பது அமெரிக்கர்கள் அல்லாத வெளிநாட்டவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சேவை.

இந்தியாவில் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்), ஐஐஎம் (இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) மற்றும் பிஐடிஎஸ் (பிட்ஸ் – பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்) போன்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. ஆனால், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என வெளிநாட்டுத் தொழிலாளர் சான்றிதழ் அலுவலகம் அளித்துள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

2017ஆம் ஆண்டு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைத் துறை 85,000 ஹெச்1-பி விசாக்களை வெளியிட்டுள்ளது. இதில், 20,000க்கும் அதிகமான விசாக்கள் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விசா பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 850 ஹெச்1-பி விசாக்கள் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாவது (747) இடத்திலும், விஸ்வேஸ்வராய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மூன்றாவது (391) இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் நான்காவது (298) இடத்திலும், புனே பல்கலைக்கழகம் ஐந்தாவது (225) இடத்திலும் உள்ளது. ஐஐடி 63 விசாக்களும், பிட்ஸ் 61 விசாக்களும் மட்டுமே பெற்றுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *