_வெங்காய ஏற்றுமதி: ஊக்கத்தொகை ரத்து!

public

உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

வெங்காய ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய வணிக ஏற்றுமதித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 10 சதவிகித ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. உள்நாட்டுச் சந்தையில் தேவை உயர்வு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்ததால் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊக்கத் தொகையை அரசு ரத்து செய்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்றுமதி ஊக்கத் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியாகும் பொருள் மற்றும் ஏற்றுமதியாகும் நாடுகளைப் பொறுத்து ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி ஊக்கத்தொகை 5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இச்சலுகை ஜூன் 30 வரையில் நீடிப்பதாக இருந்த நிலையில், தற்போது ஊக்கத்தொகை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது ஏற்றுமதியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காய உற்பத்தி மாநிலங்களில் வறட்சி காரணமாக உற்பத்தி குறையும் சூழல் இருப்பதால் 50,000 டன் வரையிலான வெங்காயத்தை இருப்பில் வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய வெங்காயச் சந்தையான மகாராஷ்டிர மாநிலத்தின் லாசல்கான் சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.13.30 ஆக இருக்கிறது. சென்ற மே மாதத்தின் இதே நாள் வெங்காயத்தின் விலை அங்கு ரூ.9 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**

[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *