விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நாசரின் மகன் அபி மெக்தி நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகிறார்.
கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் இயக்கும் அடுத்த படத்தையும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவரது இயக்கத்தில் விக்ரம் முதன்முறையாக நடிக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டின் இறுதியிலே வெளியானது.
தூங்காவனம் திரைப்படம் பிரெஞ்சு படம் ஒன்றின் தழுவலாக உருவாகியிருந்தது. அதைபோலவே இந்தப் படமும் மற்றொரு பிரெஞ்சு படத்தில் தழுவல் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆகும். அபியின் சகோதரர் லுத்ஃபுதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை [காரணமாக](https://minnambalam.com/k/2018/03/31/39) அவர் இணைய மறுத்துவிட்டார்.
ஆக்ஷன் மற்றும் எமோஷனல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாக உள்ளன. விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு சாமி ஸ்கொயர், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.�,”