_ரூ.99 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்!

Published On:

| By Balaji

பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆன நிலையில், தற்போது சுமார் ரூ.99 லட்சம் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே வரிச்சூர் சோதனைச் சாவடியில் நேற்று (செப்டம்பர் 2) போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற கார் ஒன்றைச் சோதனையிட்டனர். அந்த காரில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கடத்தி வரப்பட்டிருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்தப் பணத்தின் மதிப்பு ரூ.99 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடத்தல் தொடர்பாக, அந்த காரில் வந்த நவீன்சக்தி, ராஜசேகர், தர்மா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பணம் எங்கிருந்து, யாரால் கடத்தி வரப்பட்டது மற்றும் இதன் பின்னணி என்னவென்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share