மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பின் பாலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. பின்னர் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகரான சந்தர் என்பவர் சொந்தமாக ஒரு பி.எம்.டபுள்யூ காரை வாங்கி அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் கொண்ட பலகையை பொருத்தியுள்ளார். காரின் முன், பின் பகுதிகளை படம்பிடித்து அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் கேப்ஷனில், “நான்தான் உங்களது மிகப்பெரிய ரசிகன். இன்று எனது கனவு காரை வாங்கியுள்ளேன். அதில் உங்களது பெயர் இடம்பெறவேண்டும் என விரும்பினேன். எனது வாழ்க்கையை உங்களது இசை வாயிலாக மாற்றியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்தை ஈர்க்கும் என்று சந்தர் தனது கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மிக பிஸியாக உள்ளார். சந்தரின் பதிவை பார்த்த ரஹ்மான் இன்ஸ்டாகிராமில், “முபாரக் கடவுள் ஆசிகளுடன்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் ட்விட்டரிலோ, “காரை பாதுகாப்பாக ஓட்டுங்கள்” என்று சந்தருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த பதிவு சமூக ஊடக வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)
**
�,”